பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி ராஜினாமா

By பிடிஐ

பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி ரவி சவானி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரவி சவானியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பணி விலகல் முன்னறிவிப்பு காலமாக (நோட்டீஸ் பீரியட்) இன்னும் ஒரு மாதம் அவர் பணியாற்றுவார் என பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

ரவி சவானி, கடந்த 2012-ல் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியானார். கடந்த ஏப்ரலில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத் துள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டி முடியும் வரை அந்தப் பணியில் தொடருமாறு பிசிசிஐ அவரை கேட்டதாகக் கூறப்படுகிறது.

பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக நீரஜ்குமார் நியமிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. டெல்லி காவல் துறையின் முன்னாள் ஆணை யரான நீரஜ் குமாரின் தலைமை யில்தான் 2013-ல் ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குறித்த விசாரணை நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

56 mins ago

சுற்றுச்சூழல்

50 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்