ஆஸ்திரேலிய ஓபன்: மரின் கரோலினா, சென் லாங் சாம்பியன்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் மரின் கரோலினாவும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் லாங்கும் சாம்பியன் பட்டம் வென்றனர். சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்திலுள்ள ஸ்பெயின் மரின் கரோலினா, சீனாவின் ஷிஜியன் வாங்கை எதிர்கொண்டார். இறுதிப்போட்டியில் அபாரத் திறமையை வெளிப்படுத்திய கரோலினா 22–20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் ஆனார்.

சென் லாங் சாம்பியன்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சீனாவின் சென் லாங், டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்சென் மோதினர். முதல் செட்டை 21–12 என்ற புள்ளிகள் கணக்கில் சென் லாங் கைப்பற்றினார். 2-வது செட்டில் சுதாரித்த ஆக்ஸல்சென் 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய சென் லாங் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டி ஒரு மணி நேரம் 17 நிமிடம் நீடித்தது. சென் லாங்குக்கு இது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும்.

இரட்டையர் பிரிவு

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் லீ யோங் டே, யூ இயோன் சியோங் ஜோடி, சீனாவின் லியு செங், லு கய்ன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோன்று மகளிர் இரட்டையர் பிரிவில் சீனாவின் டாங் யுவான் டிங், மா ஜின் ஜோடி, சக நாட்டு வீராங்கனைகளான டாங் ஜின்குவா, டியான் யிங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

52 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்