யு-19 கால்பந்து அணியின் பயிற்சியாளராக ஜான்சன் நியமனம்

By பிடிஐ

19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த லீ ஆலன் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

34 வயதான ஜான்சன், திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிபவராக செயல்படுவதோடு, சீனியர் அணியின் உதவிப் பயிற்சியா ளராகவும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய சீனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் கூறுகை யில், “ஜான்சனின் வருகை இந்தியா வில் கால்பந்து வீரர்களின் மேம் பாட்டுக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும். ஜான்சன் மதிப்புமிக்க ஏராளமான விஷயங்களையும் தன்னோடு கொண்டு வருவார். இங்கிலாந்தில் உள்ள இரு பெரிய கால்பந்து கிளப்புகளில் பணியாற்றியிருக்கிறார்.

ஜான்சன், சீனியர் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். நாங்கள் இருவரும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இருவரும் பரிச்சயமானவர்கள். அவரின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்