சுதிர்மான் கோப்பை: இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

By பிடிஐ

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டி சீனாவின் டங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் குரூப் 1 ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன. சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி, 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டுள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் தென் கொரியாவிடம் தோற்குமானால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

தென் கொரிய அணியில் சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள வான் ஹூ சன், 7-வது இடத்தில் உள்ள சங் ஜி ஹியூன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப் பதால் அந்த அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது.

ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், சாய்னா ஆகியோர் வென்றாலும், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

அந்த ஜோடி உலகின் 8-ம் நிலை ஜோடியான லீ சோ ஹீ-ஷின் சியூங் சான் ஜோடியை சந்திக்கவுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவே.

ஒற்றையர் பிரிவு ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாந்த், வானை இரு முறை தோற்கடித் திருந்தாலும், கடைசியாக மோதிய 3 ஆட்டங்களில் தோற்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சாங்கிடம் தோல்வி கண்ட ஸ்ரீகாந்த், அதிலிருந்து விரைவாக மீள்வது அவசியம்.

ஹியூனுடன் இதுவரை 6 முறை மோதியுள்ள சாய்னா, அதில் 5 முறை வெற்றி கண்டிருந்தாலும், நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மலேசியாவின் டீ ஜிங் இயை போராடியே வென்றார். எனவே இன்றைய ஆட்டம் சாய்னாவுக்கு சவாலாக இருக்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்