இங்கிலாந்து 399 ரன்களுக்கு ஆல்அவுட்: மேற்கிந்தியத் தீவுகள்-155/4

By செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் 399 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நடை பெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்திருந்தது.

2-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். இதன்பிறகு டிரெட்வெல் 8 ரன்களிலும், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 9 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.

கடைசி விக்கெட்டுக்கு இணைந்த கிறிஸ் ஜோர்டான்-ஆண்டர்சன் ஜோடி 38 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 399 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆண்டர்சன் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் ஜோர்டான் 21 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டு களையும், ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டிவோன் ஸ்மித் 11 ரன்களிலும், டேரன் பிராவோ 10 ரன்களிலும் வீழ்ந்தனர். இதையடுத்து பிராத்வெயிட்டுடன் இணைந்தார் சாமுவேல்ஸ். இந்த ஜோடி 47 ரன்கள் சேர்த்தது.

சாமுவேல்ஸ் 33 ரன்களும், பிராத் வெயிட் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 66 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள். சந்தர்பால் 29, பிளாக்வுட் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்