சாமுவேல்ஸ் சதம்: மே.இ.தீவுகள் 299-க்கு ஆல்அவுட்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 104.4 ஓவர்களில் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாமுவேல்ஸ் 103 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் ஜார்ஜ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் 94, கேப்டன் தினேஷ் ராம்தின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

சாமுவேல்ஸ் சதம்

2-வது நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. முதல் நாளைப் போலவே 2-வது நாளிலும் அவ்வப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. 3 முறை மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 226 பந்துளில் சதமடித்தார்.

அவர் 228 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, தினேஷ் ராம்தின் 31 ரன்களில் (80 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது மேற்கிந்தியத் தீவுகள்.

கடைசி விக்கெட்டுக்கு 52

பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் 22 ரன்களிலும், கெமர் ரோச் 1 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுக்க, கடைசி விக்கெட் டுக்கு இணைந்த தேவேந்திர பிஷூ-கேபிரியேல் ஜோடி இங்கிலாந்து பவுலர்களை சோதித்தது. 11.2 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. பிஷூ 48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேபிரியல் 30 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து-74/0

பின்னர் முதல் இன்னங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அலாஸ்டர் குக் 37, ஜொனாதன் டிராட் 32 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இங்கிலாந்து 225 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

56 mins ago

வணிகம்

2 hours ago

மேலும்