தோனியிடம் சிக்கித் திணறிய மூத்த புகைப்பட பத்திரிகையாளர்

By பிடிஐ

பெர்த்தில் நேற்று தோனியிடம் பேச்சு கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் சரியாக அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பேடு கட்டிக் கொண்டு வலை வேலி அருகே இந்திய கேப்டன் தோனி நின்று கொண்டிருந்த போது மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், தோனியிடம் பேச்சுக் கொடுத்த போது, “மாஹி (தோனி) நீங்கள் 2004-05-ல் இருந்தது போல் இல்லை. அப்போதெல்லாம் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள்.” என்றார்.

அதற்கு தோனி, “பொய் சொல்லாதீர்கள். 2004ஆம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது, நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்.” என்றார்.

உடனே அந்த புகைப்பட பத்திரிகையாளர் தனது நினைவை கொஞ்சம் தட்டிவிட்டு, "நீங்கள் அறிமுகமான வங்கதேசத் தொடரின் போது நான் இருந்தேன்.” என்றார்.

ஆனால் தோனி மீண்டும், “வங்கதேசத்துக்கு எதிராக நான் எனது அறிமுகப்போட்டியில் ஆடினேன் என்று உங்களுக்கு யார் கூறியது? அது கூட உங்களுக்குத் தெரியவில்லை” என்று கேலிச்சிரிப்புடன் கூறினார். (தோனி டிசம்பர் 2004-இல் வங்கதேசத்துக்கு எதிராக தன் முதல் போட்டியில் ஆடினார்).

உடனே புகைப்பட பத்திரிகையாளர், “இல்லையென்றால் ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினீர்களா” என்று கேட்க, சுற்றி இருந்தவர்கள் சிரிப்புக்குமத்தியில் புன்னகைத்தபடியே தோனி, “பாருங்கள் இதனால்தான் பத்திரிகையாளர்களை நம்பக்கூடாது” என்று இந்தியில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்