ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியில் செரீனா - ஷரபோவா

By ஏபி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் – ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் நாளை பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் செரீனா முதலிடத்திலும், ஷரபோவா 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் இதுவரை 18 முறை மோதியுள்ளனர். இதில் 16 முறை செரீனா வென்றுள்ளார். ஷரபோவா இருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் சகநாட்டு வீராங்கனை மெடிசன் கெய்ஸை எதிர்கொண்டார். இதில் 7-6 (7/5), 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த செரீனா, இறுதி ஆட்டத்துக்கு செல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இந்த போட்டியில் களமிறங்கவில்லை. எனினும் மீண்டும் ஒர் இறுதி ஆட்டத்தில் விளையாட இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

செரீனாவுக்கு இப்போது 33 வயதாகிறது. ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாடும் மிகவும் மூத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தையும் செரீனா தக்கவைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து 100 வாரங்களாக அவர் முதலிடத்தில் உள்ளார்.

ஷரவோவா தனது அரையிறுதி ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த மகரோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவா எளிதாக வென்று இறுதிச் சுற்றை எட்டினார்.

இறுதி ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஷரபோவா, இந்தத் தொடரில் பெற்ற வெற்றிகள் மூலம் எனது தன்னம்பிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. என்னை எதிர்த்து விளையாட இருப்பவர் யார் என்பதைப் பற்றி யோசிக்கப்போவதில்லை. எனது முழுத்திறனையும் பயன்படுத்தி விளையாட முடிவு செய்துள்ளேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்