கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க வேண்டும்: தோனி

By செய்திப்பிரிவு

பெர்த்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் தோனி கூறியதாவது:

ஜோடி சேர்ந்து ரன்களை எடுப்பதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவிப்பை கொடுக்கும். போதிய ரன்கள் இல்லாமல் 2 போட்டிகளில் பந்து வீச நேரிட்டது. வீரர்கள் தங்களது சிறு தொடக்கத்தை பெரிய இன்னிங்சாக மாற்றத் தவறுகின்றனர். இந்த 2 போட்டிகளில் இதனை நாங்கள் செய்யவில்லை. கடைசி ஓவர்களில் அதிக ரன்களை எடுக்க முடியாமல் போனது.

இதனை சரி செய்ய பல உத்திகளை, சேர்க்கைகளை பரிசீலனை செய்து வருகிறோம்.

மேலும் விராட் கோலியை 4-ஆம் நிலையில் களமிறக்குவதற்குக் காரணம், ஜடேஜா இல்லாததால் அக்சர் படேலை அணியில் விளையாடச் செய்கிறோம், அவர் துணைக் கண்டத்தில் விளையாடியவர். எனவே மிடில் ஆர்டர் மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கை கோலியைச் சுற்றி திட்டமிட்டுள்ளோம்.

நான், மற்றும் ரெய்னா அப்போதுதான் அடித்து ஆட முடியும், பெரிய ஷாட்களுக்குச் செல்ல முடியும். கோலி ஒரு முனையைத் தக்க வைத்தால் மறு முனையில் நானும் ரெய்னாவும் ஷாட்களை விளையாட முடியும்.

கடைசி 10 அல்லது 12 முக்கிய ஓவர்களில் ரன்களை கூடியமட்டும் அதிகம் குவிப்பது நல்லது. ஆனால் இந்த 2 போட்டிகளில் அதனைச் செய்ய முடியாமல் போனது. விராட் கோலியை 4-ஆம் நிலையில் களமிறக்க இதுவே காரணம்.

கடைசி 10 ஓவர்கள் ரன் குவிப்பு மிக முக்கியமானது அதற்காக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார் தோனி.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும் மிகப்பெரிய வாய்ப்பை பெற இந்தியாவை நாளை வீழ்த்த வேண்டும், அதற்கு மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும், கடந்த 3 நாட்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். அணி வீரர்கள் இறுதிக்குள் நுழைந்து ஆஸி.-யைச் சந்திக்க ஆர்வமாக உள்ளனர்.’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

15 mins ago

க்ரைம்

33 mins ago

ஜோதிடம்

31 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்