4-வது அதிவேக இரட்டைச் சதம்: பிரெண்டன் மெக்கல்லம் சாதனை

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரகா ஷார்ஜாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் 186 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 4-வது அதிவேக இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரெண்டன் மெக்கல்லம்.

முன்னதாக 78 பந்துகளில் சதம் கண்டு ராஸ் டெய்லர் வைத்திருந்த 81 பந்துகள் சத சாதனையை முறியடித்த பிரெண்டன் மெக்கல்லம், 3-ஆம் நாளான இன்று தொடர்ந்து அதிரடியாக விளையாடி 186 பந்துகளில் இரட்டை சதம் கண்டார்.

யாசிர் ஷா என்ற லெக்ஸ்பின்னர் வீசிய பந்தை மேலேறி வந்து 196 ரன்களிலிருந்து தனது 11-வது சிக்சர் மூலம் 202 ரன்களுக்குச் சென்றார் மெக்கல்லம். 188 பந்துகளில் 21 பவுண்டரி 11 சிக்சர்களுடன் அவர் 202ரன்கள் எடுத்து காய்ச்சியது போதும் என்று யாசிர் ஷா பந்தில் பவுல்டு ஆனார்.

151 பந்துகளில் நேதன் ஆஸ்ட்ல் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த இரட்டை சதமே இன்றும் உலக சாதனையாக இருந்து வருகிறது.

நியூசி. அணியில் 4 இரட்டைச் சதங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். மேலும் ஒரே ஆண்டில் 3 இரட்டைச் சதம் எடுக்கும் 4-வது டெஸ்ட் வீரரானார் மெக்கல்லம். டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மற்ற மூவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சனுடன் இணைந்து 2-வது விக்கெடுக்காக 297 ரன்கள் சேர்க்கப்பட்டது. தற்போது கேன் வில்லியம்சன் 181 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 46 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

நியூசிலாந்து அணி 90 ஓவர்கள் முடியும் தறுவாயில் 456/2 என்று உள்ளது. ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் நொறுக்கப்பட்டு வருகிறது. டெய்லரும், வில்லியம்சனும் இணைந்து இதுவரை 3-வது விக்கெட்டுக்காக 109 ரன்கள் சேர்த்து ஆடிவருகின்றனர்.

பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 351 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்பின்னர் கிரெய்க் 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்