காலிஸ், காடிச்சை கழற்றிவிடுகிறது கேகேஆர் அணி : தினேஷ் கார்த்திக் நிலைமை?

By பிடிஐ

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமாக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அதிருப்தி அடைந்த நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது.

அதன்படி, பயிற்சியாளர் ஜேக் காலிஸையும், துணைப் பயிற்சியாளர் சைமன் காடிச்சையும் கழற்றிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறது.  புதிய பயிற்சியாளர், துணைப்பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

அதேசமயம், கேப்டன் தினேஷ் கார்த்திக் குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை. அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதால்,விரைவில் அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஐபிஎல் சீசன்களில் முதல்முறையாக  இந்த ஆண்டுதான் கேகேஆர் அணி ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து கேகேஆர் அணியின் தலைமைநிர்வாக அதிகாரி வெங்கி மைசூர், அணியின் இணையதளத்தில் கூறியிருப்பவதாவது, " ஜேக்ஸ் காலிஸ் கேகேஆர் குடும்பத்தின் தொடர்பில் எப்போதும் இருப்பார். ஜேக்ஸ் காலிஸுடன் தொடர்ந்து பணியாற்றும் வழிகள் குறித்து ஆய்வு செய்து, அணியை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

காலிஸ் பதிவிட்ட கருத்தில் " கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 9 ஆண்டுகள் கேகேஆர் அணியில் பணியாற்றியது சிறப்பானதாக அமைந்தது. வீரராக, ஆலோசகராக, தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினேன். வாய்ப்புகளை ஆய்வு செய்ய நேரம் வந்துவிட்டது. அணி நிர்வாகம், உரிமையாளர், மேலாண்மைக் குழு, வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் " எனத் தெரிவித்துள்ளார்.

காலிஸ், கேடிச் தலைமையில் கீழ் இதுவரை கேகேஆர் அணி 61 போட்டிகளில் 32 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்