வாழ்வா சாவா போட்டியில் நியூஸி.க்கு எதிராக இங்கிலாந்து முதலில் பேட்டிங்: செஸ்டர் லீ ஸ்ட்ரீட் ஆடுகளம் எப்படி?

By செய்திப்பிரிவு

10 புள்ளிகளுடன் இருக்கும் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி  செய்ய வேண்டிய நிலையில் உலகக்கோப்பை இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

 

பிட்ச் பற்றி அதிகார பூர்வ அறிக்கையில்லை என்றாலும் முதல் பாதி ரன்கள் எடுக்க வசதியாக இருக்கும் என்றும், பிற்பாதியில் கொஞ்சம் மந்தமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.  5 முறை தொடர்ச்சியாக நியூஸிலாந்திடன் உலகக்கோப்பையில் இங்கிலாந்து உதை வாங்கியுள்ளது. இன்று வரலாறு மாறுமா அல்லது மீண்டும் நிலைபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

நியூஸிலாந்து அணியில் பெர்கூசனுக்குப் பதில் டிம் சவுதி களமிறங்குகிறார்.

 

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும் பிட்ச் பற்றி கூறும்போது பிட்ச்கள் இங்கு கடினமாக மாறிவருகின்றன. ஆட்டம் போகப்போக மெதுவாகவும் பந்துகள் தாழ்வாகவும் வருகின்றன. இந்த ஆட்டம் காலிறுதி போன்றது, நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம் அதன் பலனை இன்று பார்ப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்