இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி

By இரா.முத்துக்குமார்

இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் இலங்கையை தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களில் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது.

பாகிஸ்தான் அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 9 இருதரப்பு தொடர்களையும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 8 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்று சாதனையை தன்வசம் வைத்துள்ளது. தற்போது இந்தியா 8 தொடர்களை தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக் வென்றுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் போட்டிகளில் நேற்று முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுதான் அதிகபட்சமாகும். நேற்று 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது பும்ராவின் சிறந்த லிஸ்ட் ஏ பந்து வீச்சாகும்.

4 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய விதத்தில் 19 ஒருநாள் போட்டிகளில் 4 முறை பும்ரா இதனைச் சாதித்துள்ளார். மொகமது ஷமி 35 ஒருநாள் போட்டிகளில்தான் 4 முறை 4 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைச் சாதித்துள்ளார்.

நேற்றைய சதத்திற்கு முன்பாக ரோஹித் சர்மாவின் இலங்கை மைதான ரன் சராசரி 16.14. அதாவது 23 போட்டிகளில் 339 ரன்களை அவர் அங்கு எடுத்திருந்தார். நேற்று ரோஹித் சர்மா எடுத்த 124 நாட் அவுட் இன்னிங்ஸ் அவரது 12-வது ஒருநாள் சதம் என்பதோடு இந்தியாவுக்கு வெளியே 8-வது ஒருநாள் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013-ல் இந்திய அணிக்கு திரும்பிய பிறகு ரோஹித் சர்மா 10 ஒரு நாள் சதங்களில் 7 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார்.

வெற்றிகரமான விரட்டல்களில் தோனியின் சராசரி 101.84 என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 1000 ரன்கள் அடித்த வீரர்களில் வெற்றிகர விரட்டலில் அதிகச் சராசரி வைத்துள்ள ஒரே வீரர் தோனிதான். 65 வெற்றிகரமான விரட்டல்களில் தோனி 40 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார். நேற்று தோனியின் அரைசதம் அவரது 74-வது ஒருநாள் போட்டி அரைசதமாகும். சச்சின், ராகுல் திராவிட், கங்குலிதான் தோனியை விட அதிக அரைசதங்கள் பட்டியலில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சுற்றுலா

27 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்