‘ஸ்லெட்ஜிங் கலை’யை கற்று வருகிறேன்: புஜாரா

By இரா.முத்துக்குமார்

உலகம் முழுதும் கிரிக்கெட் அரங்கில் ஸ்லெட்ஜிங்கை ஒழிக்க வேண்டும் என்றும் அச்செயலில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரும் நிலையில் ஸ்லெட்ஜிங்கை கலை என்றும் அதைக் கற்க விரும்புவதாகவும் புஜாரா கூறியுள்ளார்.

ஆனால் அது தனிநபர் தாக்குதலாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார் புஜாரா.

பிசிசிஐ டிவிக்காக புஜாரா, அஜிங்கிய ரஹானே கலந்துரையாடலில் புஜாரா இது குறித்து கூறியதாவது:

நான் இன்னமும் ஸ்லெட்ஜிங் கலையை கற்று வருகிறேன். தேவை ஏற்பட்டால் ஸ்லெட்ஜிங் செய்யலாம். ஏனெனில் சில வேளைகளில் நம் பவுலர்களுக்கு அது உதவும். எதிரணி பேட்ஸ்மென்களை சில வேளைகளில் சில வார்த்தைகளால் தொந்தரவு செய்தால் அது நம் பவுலர்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அது தனிப்பட்ட தாக்குதலாக இருக்கக் கூடாது.

சில வேளைகளில் உயிரற்ற பிட்ச்களில் நம் பவுலர்கள் வீசும்போது அவர்கள் சோர்வடையாமல் இருக்க எதிரணி பேட்ஸ்மென்கள் மீது சில வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவது உதவும். ஒரு கட்டத்தில் ஸ்லெட்ஜ் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது.

இவ்வாறு கூறினார் புஜாரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

25 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்