உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் நேரடியாக 2-வது சுற்றை சந்திக்கும் சிந்து, சாய்னா

By பிடிஐ

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோருக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ளது.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரு முறை வெண்கலப் பதக்கமும் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா நெவால் ஆகியோருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாக 2-வது சுற்றை சந்திக்கின்றனர்.

சிந்து தனது 2-வது சுற்றில் கொரியாவின் ஹிம் ஹயோ மின் அல்லது எகிப்தின் ஹடியா ஹாஸ்னியுடன் மோதுவார். கால் இறுதியில் சிந்து, சீனாவின் சன் யுவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. 2105-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், தனது 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் சப்ரினா அல்லது உக்ரைனின் நடாலியாவுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. சாய்னா கால் இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கொரியாவின் சங் ஜி ஹயூனை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரஷ்யாவின் செர்ஜி சிரான்டுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான சாய் பிரணீத் முதல் சுற்றில் ஹாங் காங்கின் வெய் நானுடனும், அஜெய் ஜெயராம் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் லூகா வேபருடனும், சமீர் வர்மா ஸ்பெயினின் பேப்லோ அபியானுடனும் மோதுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்