ஆஸி. அணியைப் பதம் பார்க்க ஸ்பின் ஆலோசகராக சுனில் ஜோஷி: வங்கதேசம் நியமனம்

By இரா.முத்துக்குமார்

இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் சுனில் ஜோஷி, வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஞாயிறன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதனையடுத்து இன்னும் 2 நாட்களில் ஜோசி வங்கதேசம் செல்கிறார்.

இது குறித்து ஜோஷி கூறும்போது, “இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக நான் வங்கதேசம் செல்கிறேன். சுழற்பந்தில் வங்கதேச வீரர்களுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கவுள்ளேன்.

ஆஸ்திரேலிய அணியும் ஏற்கெனவே எஸ்.ஸ்ரீராமை தனது ஆலோசகராக நியமித்துள்ள நிலையில் சுனில் ஜோஷி தற்போது வங்கதேச அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 டெஸ்ட் போட்டிகளிலும், 69 ஒருநாள் போட்டிகளிலும் சுனில் ஜோஷி இந்திய அணிக்காக ஆடியுள்ளார். தான் ஆடிய காலத்தில் இந்திய அணிக்கு சிறிய பங்களிப்பாக இருந்தாலும் அணியின் வெற்றியை சில போட்டிகளில் தீர்மானித்துள்ளார், முன்பெல்லாம் ‘பிஞ்ச் ஹிட்டர்’ என்ற ஒரு கருத்தாக்கம் நிலவியது, திடீரென பவுலரை இறக்கி விட்டு எதிரணியின் பந்து வீச்சை குலைக்கும் உத்தியாகும், அப்படி இறக்கப்பட்டு சில அதிரடி இன்னிங்ஸ்களையும் ஆடியவர் சுனில் ஜோஷி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்