உலக செஸ்: டிராவானது 5-வது சுற்று

By செய்திப்பிரிவு

உலக செஸ் போட்டியில் ஆனந்த் - கார்ல்சன் இடையே நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இருவரும் தலா 2.5 புள்ளிகள் பெற்று, சமநிலையில் உள்ளனர்.

ரஷ்யாவின் சூச்சியில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை நிறக் காய்களில் ஆடினார். இந்த ஆட்டத்தில் ஜெயித்து முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே இருவரும் கவனமாக ஆடினார்கள்.

3...b6 நகர்த்தியதன் மூலம் குயின்ஸ் இண்டியன்ஸ் தொடக்கத்தைத் தேர்ந்தெடுத்தார் கார்ல்சன். கார்ல்சனின் 16. Na5 நகர்த்தல் செஸ் வட்டாரத்தில் பாராட்டைப் பெற்றது. 20வது நகர்த்தலை நெருங்கும்போது ஆட்டம் டிரா ஆகிவிடுமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. கார்ல்சன், ஆனந்துக்கு எவ்வித அட்வாண்டேஜூம் கொடுக்கவில்லை. கார்ல்சனை விட 45 நிமிடங்கள் பின்தங்கியிருந்தார் ஆனந்த். ஆனால், ஆனந்தின் 20. Nd5, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சென்னைக்கும் சூச்சிக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்று எண்ணவைத்தார் ஆனந்த். ஆட்டம் டிரா ஆகும் அல்லது ஆனந்த் ஜெயிக்க வாய்ப்புண்டு என்ற அளவுக்கு சூழ்நிலை மாறியது. b2 சிப்பாயை கார்ல்சன் வீழ்த்தியபோது ஆனந்த்தின் வலையில் சிக்குகிறாரா என்கிற சந்தேகம் உருவானது.

கார்ல்சனும் டென்ஷனாக இருந்தார். 24வது நகர்த்தலில் இருவருடைய ராணிகளும் வெளியேறின. ஆனந்த் 26. Rxa7 ஆடியபிறகு கார்ல்சன் துல்லியமாக ஆடினால் டிரா ஆகலாம் என்கிற நிலைமை இருந்தபோது, அப்படியே ஆடினார் கார்ல்சன். ஆனந்தின் 27. Rb7 நகர்த்தல், அனைவரும் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தைக் குறைத்தது. 39வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. இன்று 6வது சுற்று ஆட்டம் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

49 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்