முதல் டெஸ்ட்டிற்கு தோனி இல்லை: ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயலாற்றுவார்.

வலது கை மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தோனி, பிறகு கடைசி 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது

இந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:

தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல். ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விருத்திமான் சஹா, நமன் ஓஜா, அஸ்வின், கரண் சர்மா, ஜடேஜா, புவனேஷ் குமார், மொகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன்.

இலங்கைக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, ராயுடு, ரெய்னா, ராபின் உத்தப்பா, அக்‌ஷர் படேல், கரண் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, ஸ்டுவர்ட் பின்னி, வினய் குமார், கேதர் ஜாதவ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

வணிகம்

28 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

38 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்