ஜிம்பாப்வே - இலங்கை இன்று மோதல்

By ஏஎஃப்பி

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் முதல் முறையாக தலைமை ஏற்கிறார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டித் தொடரை அந்த அணி, 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தத் தொடரில் தோற்றதால் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் விலகினார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டார்.

தினேஷ் சந்திமால் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று களம் இறங்குகிறது. 27 வயதான தினேஷ் சந்திமால், இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். கேப்டனாக அவர் எப்படி செயல்படுவார் என்பதைப் பார்க்க இலங்கை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

குறிக்கோள்

இன்றைய போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய தினேஷ் சந்திமால், “இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் தரவரிசையை மேம்படுத்துவதே எனது முதல் குறிக்கோள்” என்றார்

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் குணதிலகா, இந்த ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கால் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி இப்போட்டியில் வெல்ல சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத்தை பெரிதும் நம்பியுள்ளது. அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீமர்

மறுபுறம் ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணி, டெஸ்ட் போட்டியிலும் வென்று சாதனை படைக்கும் ஆவலில் உள்ளது. “இலங்கை பயணம் எங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரைப் போலவே டெஸ்ட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி இத்தொடரை வெற்றிகரமாக முடிக்க விரும்புகிறோம்” என்று அந்த அணியின் கேப்டன் கிரீமர் கூறியுள்ளார். அந்த அணி பேட்டிங்கில் ஹாமில்டன் மசகட்சாவை பெரிதும் நம்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

ஆன்மிகம்

11 mins ago

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்