ராகுல் திராவிட் ஊதியம் ரூ.2.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்வு

By இரா.முத்துக்குமார்

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் டெல்லி டேர் டெவில்ஸ் ஆலோசர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்ட திராவிடுக்கு அதனை ஈடு செய்யும் விதமாக இந்தியா ஏ, அண்டர்-19 அணி பயிற்சியாளர் ஊதியத்தை ஆண்டுக்கு ரூ.2.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பிசிசிஐ உயர்த்தியுள்ளது.

இந்தியா ஏ, அண்டர்-19 பயிற்சியாளர் பதவி அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டில் அவர் ஜூனியர், ஏ அணிகளுடன் மட்டுமே பணியாற்றுவார் ஐபிஎல் டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளர் பொறுப்பைக் கைவிட அவர் முடிவெடுத்துள்ளார்.

ஏனெனில் உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் இருந்த ராமச்சந்திர குஹா, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் ராகுல் திராவிட் பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

பிசிசிஐ பொறுப்புச் செயலர் அமிதாப் சவுத்ரி கூறும்போது, “ராகுல் திராவிட் அவரது கட்டுக்கோப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். இளம் வீர்ர்களின் திறமைகளை வளர்ப்பதில் வெற்றி கண்டவர் எனவே அவரது ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

30 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்