37 வயதில் வீனஸ் சாதனை

By ஏஎன்ஐ

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யில் 23 வருடங்களுக்கு பிறகு மிகவும் வயதான வீராங்கனையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.

விம்பிள்டன் டென்னிஸ் கால் இறுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் போராடி 13-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலேனா ஒஸ்டா பென்கோவாவை வீழ்த்தினார்.

37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் 23 வருடங்களுக்குப் பிறகு மிகவும் வயதான வீராங்கனையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1994-ல் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா நவரத்திலோவா தனது 38 வயதில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.

அரை இறுதியில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டாவுடன் மோதுகிறார் வீனஸ் வில்லியம்ஸ். 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் கூறும்போது, "விம்பிள்டன் போட்டியை நான் மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் கடினமாக முயற்சிகள் செய்கிறேன். முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துகிறேன். இது மிகவும் அழகான விளையாட்டு, எனக்கு சிறப்பாகவும் அமைந்துள்ளது” என்றார்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சுற்றுச்சூழல்

13 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்