ரோஜர் பெடரர் பட்டம் வெல்ல வாய்ப்பு

By ஏஎஃப்பி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆன்டி முர்ரே, ஜோகோவிச் ஆகியோர் வெளியேறி உள்ளதால் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

பெடரருக்கு இது விம்பிள்டனில் 100-வது ஆட்டமாக அமைந்தது. 35 வயதான அவர் விம்பிள்டன் தொடரில் 12-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் அதிக வயதில் அரை இறுதிக்கு முன்னேறிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 1974-ம் ஆண்டு 39 வயதில் ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.

அரை இறுதியில் பெடரர், 11-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோத உள்ளார். 8-வது முறையாக விம்பிள்டனில் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ள பெடரருக்கு இம்முறை அது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டென்னிஸ் உலகில் பெடரரின் பரம வைரிகளாக கருதப்படும் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் கால் இறுதி சுற்றுகளுடன் வெளியேறி உள்ளனர். ஆன்டி முர்ரே கால் இறுதியில் அமெரிக்காவின் சேம் குயர்ரேவிடம் வீழ்ந்தார். செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.

கடும் சவால் கொடுக்கக்கூடிய ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது சுற்றுடன் நடையை கட்டிவிட்டார். இதனால் வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பெடரர் தகுதி பெறும் பட்சத்தில், அவரது கிராண்ட் ஸ்லாம் மகுடங்களில் மேலும் ஒரு வைரமாக விம்பிள்டன் கோப்பை இணையக் கூடும்.

இது நிகழும் பட்சத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி தனது 36-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள பெடரருக்கு சிறந்த பரிசாக இருக்கும். அவர் இதுவரை தனது வாழ்நாளில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

35 mins ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

57 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்