ஆன்டொனெல்லா ரொகுஸ்ஸோவை மணந்தார் ‘லயன்’ மெஸ்ஸி

By செய்திப்பிரிவு

அர்ஜெண்டினாவின் ரொசாரியோவில் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி தன் காதலி ஆன் டொனெல்லா ரொகுஸ்ஸாவை திருமணம் முடித்தார்.

கால்பந்து வீரர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ‘நூற்றாண்டின் திருமணம்’ என்று மெஸ்ஸியின் திருமணம் விதந்தோதப்படுகிறது.

திருமண நிகழ்ச்சி முடிந்து கசீனோ காம்ப்ளக்ஸில் உள்ள விடுதியில் பத்திரிகையாளர்கள் புடைசூழ சிகப்புக் கம்பளத்தில் மெஸ்ஸி-ரொகுஸ்ஸோ ஜோடி நடந்து சென்றனர்.

குழந்தைகள் தியாகோ, மடீயோ ஆகிய இருவரும் நிகழ்ச்சியில் முதல் வரிசை இருக்கைகளில் அமரவைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 260 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பாடகி, நடன அழகி ஷகிரா மற்றும் அவரது கணவர், மெஸ்ஸியின் சக வீரர் ஜெரார்ட் பிக், பார்சிலோனா சக வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரேஸ் ஆகியோரும் பங்கு பெற்றனர்.

முன்னாள் பார்சிலோனா, தற்போதைய செல்ஸீ நட்சத்திரம் செஸ்க் ஃபாபர்காஸ் கலந்து கொண்டார், இவர்களோடு அர்ஜெண்டின வீரர் செர்ஜியோ அகியுரோ ஆகியோரும் இருந்தனர்.

திருமண நிகழ்வு சிட்டி செண்டர் காசினோவில் நடைபெற்றது, இதனருகில்தான் பயங்கரமான குற்றம் நிரம்பிய போதைமருந்து கும்பல் புழங்கும் குடிசைப்பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

14 mins ago

க்ரைம்

32 mins ago

விளையாட்டு

27 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்