சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராகப் பணியாற்ற சாஸ்திரி விருப்பம்

By பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பணியாற்ற சாஸ்திரி விருப்பம் தெரிவித்தார்.

அதாவது ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்துக்குள் வராமல் இருந்தால் சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராக வரவேற்கப்படுவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ சிறப்புக் கமிட்டியுடன் நேற்று சந்திப்பு நிகழ்ந்த போது சாஸ்திரி தனது இந்த விருப்பத்தை தெரிவித்தார்.

சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுதான் ரவிசாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்தது, இந்நிலையில் அந்தக் குழுவில் இருக்கும் சச்சினையே ஆலோசகராக அழைப்பு விடுத்துள்ளார் ரவி சாஸ்திரி.

“குறுகிய காலத்திற்கு சச்சின் ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ரவி சாஸ்திரி தெரிவித்தார். ஆனால் சிறப்புக் கமிட்டி அவரிடம் இரட்டைப் பதவி விவகாரம் பற்றி எடுத்துரைத்தனர்” என்று பேர் கூற விரும்பாத கமிட்டி உறுப்பினர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

டெண்டுல்கர் இதற்கு ஒப்புக் கொண்டால் ஐபிஎல் உள்ளிட்ட அவரது பிற பணிகளை அவர் விட்டுவிட வேண்டும்.

இந்நிலையில் ஒரு குறுகிய காலத்திற்காக ஒருவரை அவரது பிற பணிகளைத் துறந்து விட்டு ஆலோசகராக பணிக்கு அழைப்பது சரியல்ல என்று அந்த உறுப்பினர் கருதுகிறார்.

ஜாகீர் கானிடமும் இதுதான் பிரச்சினை என்று கூறிய அந்த உறுப்பினர் ஆண்டுக்கு 25 நாட்களே அவரால் இந்த ஆலோசனைப் பொறுப்பில் இருக்க முடியும். வெறும் 25 நாட்களுக்காக ஒருவர் தனது பிற பணிகளை விட்டு விட வேண்டுமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.

நேற்று பாரத் அருணை பவுலிங் பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்