1972 மூனிச் ஒலிம்பிக்: கறுப்பு செப்டம்பர்

By செய்திப்பிரிவு

மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் 20-வது ஒலிம்பிக் போட்டி 1972-ல் நடைபெற்றது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற்ற இந்த ஒலிம் பிக்கில் 12 நாடுகளில் இருந்து 7170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சோவியத் யூனியன் 50 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 33 தங்கம், 31 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 94 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கிழக்கு ஜெர்மனி 20 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

கூடைப்பந்தில் சர்ச்சை

கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ரஷ்யா - அமெரிக்கா அணிகள் மோதின. அமெரிக்கா 50-49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் ரஷ்யா மேலும் 2 புள்ளிகளைப் பெற்று வென்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆட்டநேரம் முடிந்துவிட்டதாக கூறிய அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தை பெற மறுத்துவிட்டது.

இந்தியாவுக்கு வெண்கலம்

இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் தனி வீரர் ஒருவர் வென்ற அதிகபட்ச பதக்கம் இதுவாகும். 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கம் வென்று மார்க் ஸ்பிட்ஸின் சாதனையை முறியடித்தார்.

கறுப்பு செப்டம்பர்

ஒலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தில் ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் 8 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 9 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.

இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று அவர்கள் கோரினர். அதைத்தொடர்ந்து அவர்களை சுட்டுக்கொன்றனர்.

பின்னர் ஜெர்மனி போலீ ஸாருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டனர். இந்த சம்பவம் கறுப்பு செப்டம்பர் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

க்ரைம்

24 mins ago

விளையாட்டு

19 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்