கொல்கத்தா - புனே இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த புனே அணி தொடர்ச்சியாக பெற்ற 3 வெற்றிகளின் மூலம் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக வலுவான மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய தால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது. பேட்டிங்கில் 26 வயதான மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுல் திரிபாதி கடந்த சில ஆட்டங்களாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தனது கடைசி 3 ஆட்டங்களில் முறையே 31, 59, 45 ரன்களை அதிரடியாக விளையாடி சேர்த்துள்ளார்.

ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தோனியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ரஹானே, ஸ்மித், மனோஜ் திவாரி ஆகியோரும் பேட்டிங்கில் சீராக ரன் சேர்ப்பது பலமாக உள்ளது.

பந்து வீச்சில் இம்ரன் தகிர், பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து மொத்தம் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர்.

கொல்கத்தா அணி 7 ஆட்டங் களில், 5 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. ஆரம்ப கட்ட ஆட்டங்களில் அடுத்தடுத்து இரு அரை சதம் அடித்த கவுதம் காம்பீர் அதன் பிறகு சீராக ரன் குவிக்க தவறினார். அதேவேளையில் ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

தொடக்க வீரராக களமிறங்கும் சுனில் நரேன் தனது அதிரடியால் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுக்கும் நிலையில் நடுக்களத்தில் இறங்கும் வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தி பெரிய அளவில் ரன் குவிப்பதில் சுணக்கம் அடைந்துவிடுகின்றனர். இந்த விஷயத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 49 ரன்களுக்குள் சுருட்டி கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரமிக்க வைத்தனர். கிறிஸ் வோக்ஸ், நாதன் கவுல்டர், உமேஷ் யாதவ், கிராண்ட் ஹோம் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி, ஒட்டுமொத்த பெங்களூரு அணியையும் நிலைகுலையச் செய்தனர். இந்த கூட்டணி இன்றைய ஆட்டத்தில் சவால் தரக்கூடும்.

அணிகள் விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், ஷெல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

இடம்: புனே

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

16 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

மேலும்