புனே அணியை சமாளிக்குமா பஞ்சாப்: இந்தூரில் இன்று பலப்பரீட்சை- தமிழக வீரர் நடராஜன் மீது எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மாலை 4 மணிக்கு இந் தூரில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகிறது.

புனே அணி முதல் ஆட் டத்தில் மும்பை அணியை வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி னார்கள். அதிலும் ஸ்மித் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் கள் தேவைப்பட்ட நிலையில் 4 மற்றும் 5-வது பந்தில் சிக்ஸர் கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இம்ரன் தகிர் ரன்குவிப்பை கட்டுப்படுத்து வதுடன் விரைவாக விக் கெட்கள் வீழ்த்துவது அணிக்கு பலமாக உள்ளது. அவருக்கு உறுதுணையாக ஆடம் ஸம்பா, ரஜத் பாட்டியா ஆகியோரும் சிறப் பாக செயல்படுகின்றனர்.

வேகப்பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் அசோக் திண்டா 4 ஓவர்களில் 57 ரன்கள் தாரைவார்த்தார். மற்றொரு வீரரான தீபக் சாஹர் 2 ஓவர்கள் வீசி 21 ரன்கள் வழங் கினார். ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக் ஸூம் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்த வில்லை. இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கக்கூடும்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் ஆஸ்தி ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த இரு சீசன்களிலும் கடைசி இடத்தை பிடித்த பஞ்சாப் அணி இம்முறை சேவக்கின் ஆலோசனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெலுடன் டேவிட் மில்லர், மோர்கன் ஆகி யோர் அதிரடி வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டராக உள்ளார். ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த இளம் வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆல்ரவுண்டரான டேரன் சமி நேற்று பிற்பகல் வரை அணியினருடன் இணைய வில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் கள மிறங்குவது சந்தேகமே. காயம் காரணமாக முரளி விஜய் விளையாடாததால் மார்ட்டின் கப்தில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல் நெருக்கடி தரக்கூடும். வேகப்பந்து வீச்சில் இஷாந்த சர்மா, வருண் ஆரோன் வலுசேர்க்கக் கூடும்.

அணி விவரம்:

ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜாத் பாத்தியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், மனன் வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ் ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில் சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட் ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

இடம்: இந்தூர்

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்