உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய தொடர் நல்ல முன்தயாரிப்பாக அமையும்: தோனி

By பிடிஐ

உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சிறந்த முன் தயாரிப்பாக அமையும் என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.

பிப்.14, 2015- அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை தன் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் பல அணி கேப்டன்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

தோனி கூறும்போது, “2011 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இது, அணியின் திறமையை அறிவுறுத்துகிறது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் தன்மை வீரர்களிடத்தில் இருப்பது பெரிய விஷயம் என்று கருதுகிறேன்.

இந்த முறை, உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடுவது சிறந்த முன் தயாரிப்பாக அமையும். இது நமது திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். கிரிக்கெட்டின் மிக உயர்ந்த பரிசை வெல்ல ஆஸி.தொடர் உதவும் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட்டின் மிக உயர்ந்த பரிசு உலகக் கோப்பையை வெல்வதே. அதுவும் உலக சாம்பியன்கள் என்ற தகுதியை ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் தக்க வைப்பது சிறந்ததாகும். எல்லா வீரர்களையும் போல், கிரிக்கெட் ஆட்டத்திற்காக உயிரை விடும் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் போல், நானும் இந்த உலகக் கோப்பையை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்நோக்குகிறேன்”

இவ்வாறு கூறினார் தோனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்