ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரரான சேம் பில்லிங்ஸ் 40 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 19, ஸ்ரேயஸ் ஐயர் 22, ரிஷப் பந்த் 15, கிறிஸ் மோரிஸ் 16 ரன்கள் சேர்த்தனர்.

கோரே ஆண்டர்சன் 22 பந்து களில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரி களுடன் 39 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட் கம்மின்ஸ் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

189 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே திணறியது. மனன் வோரா 3, விருத்திமான் சாஹா 7 ரன்களில் சபாஷ் நதீம் பந்தில் ஆட்டமிழந்தனர். ஹசிம் ஆம்லா 19 ரன்களில் மோரிஸ் பந்திலும், மோர்கன் 22 ரன்களில் கம்மின்ஸ் பந்திலும், மேக்ஸ்வெல் ரன் எதும் எடுக்காத நிலையில் அமித் மிஸ்ரா பந்திலும் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர்.

11 ஓவர்களில் 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த பஞ்சாப் அணி அதன்பின்னர் சரி வில் இருந்து மீளமுடியாமல் போனது. 28 பந்துகளில் 24 ரன் கள் சேர்த்த டேவிட் மில்லர் ஆண்டர்சன் பந்தில் வெளியேறி னார். கடைசி கட்டத்தில் அதிரடி யாக விளையாடிய அக் ஷர் படேல் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 1 பவுண் டரியுடன் 44 ரன்கள் சேர்த்தார் ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் மோரிஸ் 3 விக் கெட்கள் கைப்பற்றினார். 51 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்