திபா கர்மாகர்: இந்தியாவின் பறக்கும் பாவை

By செய்திப்பிரிவு

திபா கர்மாகருக்கு 7 வயதில் பிடிக்காத மொழி ஆங்கிலம். ஆனால் அவரது தந்தையும் சாய் அமைப்பின் பளுதூக்கும் பயிற்சியாளருமான துலால் கர்மாகருக்கு தன் மூத்த மகளைப் போல திபாவும் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று ஆசை. மேலும் ஒல்லியான துறுதுறுப்பான உடல்வாகை கொண்ட அவளை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக்க வேண்டும் என்றும் ஆசை.

இரண்டு ஆசைகளையும் மகளிடம் கூற அவளோ, ‘‘நான் ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் என்னை ஆங்கிலம் படிக்குமாறு வற்புறுத்தக் கூடாது. நான் வங்காள மீடியத்தில்தான் படிப்பேன்’’ என்றாள். திபாவைப் பொறுத்தவரை அப்போது ஜிம்னாஸ்டிக், ஆங்கிலம் இரண்டுமே பிடிக்காது. ஆனால் ஆங்கிலத்துக்கு ஜிம்னாஸ்டிக் மேல் என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தாள். அப்படி ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பால் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை தேர்ந்தெடுத்த திபா கர்மாகர்தான் இன்று ஒலிம் பிக்கில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீராங்கனை என்று புகழ்பெற்றுள்ளார்.

ஜிம்னாஸ்டிக்கில் இந்தியா வின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள திபா கர்மாகர் 1993-ம் ஆண்டு திரிபுராவில் உள்ள அகர்த்தலாவில் பிறந் தார். திபாவுக்கு 7 வயது இருக்கும் போது பிஷ்பேஸ்வர் நந்தி என்ற பயிற்சியாளரிடம் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்காக அழைத்துச் சென்றார் அவரது தந்தை துலால். திபாவை ஏற இறங்கப் பார்த்த பயிற்சியாளர், தட்டையான அவ ளது பாதங்களைப் பார்த்ததும், ‘இவள் தேறமாட்டாள்’ என்று நினைத்தார். ஜிம்னாஸ்டிக் போட் டியில் ஒருவர் சாதிக்க வேண்டு மானால் அவரது பாதங்கள் தட்டை யாக இருக்கக் கூடாது. சற்று வளைவாக இருக்கவேண்டும்.

இந்த ஒரு காரணத்தாலேயே அந்த பெண் ஜிம்னாஸ்டிக்குக்கு சரிப்பட்டு வரமாட்டாள் என்று நினைத்த பிஷ்வேஸ்வர் நந்தி, அதை அவரது தந்தை துலால் கர்மாகரிடம் கூறினார். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்க திபாவுக்கு பயிற்சியளிக்க நந்தி முடிவெடுத்தார். முதல் கட்டமாக தட்டையாக உள்ள திபாவின் பாதத்தை சற்று வளைக்க, அவ ருக்கு பயிற்சி தரப்பட்டது. அது சரியான பிறகுதான் ஜிம்னாஸ்டிக் பயிற்சி ஆரம்பமானது.

முதலில் திபாவுக்கு ஜிம்னாஸ் டிக் விளையாட்டில் பெரிய அள வில் ஆர்வம் இல்லை. ஆங்கி லத்துக்கு பதில் ஜிம்னாஸ்டிக் படிக்கிறேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்ததற்காக பயிற் சிக்கு சென்றுவந்தார். ஆனால் 2007-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக் போட்டி யில் பதக்கம் வென்றதும் ஜிம் னாஸ்டிக் மீதான அவரது பார்வை மாறிப்போனது. ஜிம்னாஸ்டிக் தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்த அவர் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

அதன் பிறகு ஜிம்னாஸ்டிக்கில் அவர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தன்னால் வெற்றிபெற முடியும் என்று நினைத்திருந்த திபா கர்மாகரின் பார்வையை விசாலப் படுத்தியவர் ஆசிஷ் குமார். 2010-ம் ஆண்டு நடந்த காமன் வெல்த் போட்டியில் அவர் ஜிம் னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற போது இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் திபா கர்மாகரும் இருந்தார். அவரைப் போல் தானும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் அயராமல் உழைத்தவர், 2014 காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி யில் வால்ட் பிரிவில் வெண் கலப் பதக்கம் வென்று ஜிம்னாஸ் டிக்கில் இந்தியாவின் கொடியை மேலும் உயரமாக பறக்கவிட்டார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்க, ஒலிம்பிக்கை நோக்கி வேக நடைபோடத் தொடங்கினார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதுடன், சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு வழங்கும், ‘உலகத் தரம்வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை’ என்ற சான்றிதழையும் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றது முதல் திபாவுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவரது பயிற்சிக்காக மட்டும் 1.10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது இந்திய விளையாட்டு ஆணை யம். மேற்கொண்டும் செலவு செய்யவேண்டி இருந்தால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஆனால் இதிலெல்லாம் அவர் திருப்தி யாகவில்லை. ‘‘இந்தியாவில் ஜிம் னாஸ்டிக் பயிற்சி பெறுவதற்கு 3 மையங்கள்தான் உள்ளன. இந்த விளையாட்டில் இந்தியா முன்னேற வேண்டுமானால் அந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’’ என்கிறார் திபா கம்ராகர்.

விளையாட்டுகளிலேயே மிக வும் கடினமானதாக ஜிம்னாஸ்டிக் கருதப்படுகிறது. இதில் திபா அதிகம் கலந்துகொள்வது ப்ராடு னோவா வால்ட் என்னும் பிரிவில் தான். வேகமாக ஓடிவந்து ஒரு திண்டின் மீது கைகளை வைத்து உயரே எழும்பி சம்மர் சால்ட்களை அடித்தவாறே தரை யைத் தொடுவதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம். சம்மர் சால்ட்களை அடித்தவாறு தரை யை நோக்கி வரும்போது மிக வும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தலையில் அடிபட வாய்ப்புள்ளது. தவறு தலாக விழுந்தால் கை, கால்கள் செயலற்று போகவும் வாய்ப்புள்ளது.

இத்தகைய கடினமான விளை யாட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, ‘‘ஒவ்வொரு வெற் றிக்கு பின்னாலும் ஓர் ஆபத்து இருக் கிறது. நாம் ரிஸ்க் எடுத்து செயல் பட்டால் தான் வெற்றிகளை குவிக்கமுடியும்’’ என்கிறார் இந்தியா வின் பறக்கும் பாவை யான திபா கர்மாகர். ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வெல்ல திபா கர்மாகரை வாழ்த்துவோம்.

திபா கர்மாகர் இதுவரை சாதித்தவை

$ 2011 தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம்.

$ 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம்.

$ 2015 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

16 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்