110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் முறையாக ஜமைக்காவுக்கு தங்கம்

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் தங்கப் பதக்கம் வென்றார்.

22 வயதான ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை.

ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க மேடையை தவறவிடுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் தேவோன் ஆலன் 5-வது இடத்தையும், ரோனி 8-வது இடத்தையுமே பிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

கல்வி

22 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

43 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்