மகளிர் கால்பந்து: சென்னை சாம்பியன்

By செய்திப்பிரிவு

தென் மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே, பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் வண்டலூர் அடுத்த மேலக்கோட் டையூரில் உள்ள, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது. இதில் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றன.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணியை வீழ்த் தியது. சென்னை பல்கலைக் கழக அணியின் சார்பில் மாளவிகா 44-வது நிமிடத்திலும், சுமித்ரா 47-வது நிமிடத்திலும், கோல்கள் அடித்தனர். திருவள் ளுவர் அணியின் சுமித்ரா 67-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மூன்றாவது இடத்தை அண்ணாமலை பல்கலைக் கழகம், நான்காவது இடத்தை மதுரை காமராஜர் பல்கலைக் கழக அணிகள் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் ஒய்.எம்.சி.ஏ பொதுச் செயலாளர் ஜேக்கப் அப்பா துரை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி ஆகி யோர் பரிசுகளை வழங்கினர். தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர் மூர்த்தி, போட்டி ஒருங்கிணைப்பு செய லாளர் பி.கோபிநாதன், பதிவாளர் டி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்