கேப்டனாக இருந்தபோது எனக்கு ஆதரவு இல்லை: ஓய்வு பெற்ற தில்ஷன் குற்றச்சாட்டு

By பிடிஐ

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை பேட்ஸ்மேன் தில்ஷன், தனது கேப்டன் பதவிக் காலத்தில் யாருமே ஆதரவளிக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

39 வயதான தில்ஷான் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தம்புலாவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தனது கடைசி ஆட்டத்தில் அவர் 42 ரன்கள் எடுத்தார். 330 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தில்ஷன் 22 சதங்கள், 47 அரை சதங்களுடன் 10,290 ரன்களை 39.27 சராசரியுடன் குவித்துள்ளார்.

தில்ஷன் பங்கேற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடந்த 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி களில் இருந்து விடைபெற்ற தில்ஷன் அடுத்த வாரம் ஆஸ்தி ரேலியாவுக்கு எதிராக நடை பெறும் டி20 போட்டி தொடரில் விளையாடுகிறார். இந்தத் தொடர் முடிவடைந்ததும் டி 20 ஆட்டங்களில் இருந்தும் அவர் ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் தில்ஷன் கூறியதாவது: நான் 2011-ம் ஆண்டு கேப்டன் பதவி வகித்தபோது இங்கிலாந்து தொடரில் காயம் அடைந்தேன். அப்போது அணியில் இருந்து இரு முன்னாள் கேப்டன்களும் பொறுப்பை ஏற்க மறுத்தனர். பலமுறை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே அவர்களில் ஒருவர் அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டார். மேலும் இந்த தொடரில் மேத்யூஸ் பந்து வீச மறுத்தார். காயம் ஏற்பட்டுள்ளது என கூறி அவர் அமர்ந்து கொண்டார்.

ஆனால் நான் கேப்டன் பதவியில் விலகிய ஒரு வார காலத்தில் மேத்யூஸ் மீண்டும் பந்து வீசினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 2012-ல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் 51.30 சராசரியுடன் 513 ரன்கள் குவித்தேன்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 500 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் பெற்றேன். என்னை பொறுத்தவரையில் கேப்டன் யார் என்பது பிரச்சினை இல்லை. கேப்டன் பதவியில் இருந்து யார் என்னை வெளியேற்றினார்கள் என்பது குறித்தும் நான் கவலைப் பட்டதில்லை. நான் எப்போதும் எனது நாட்டுக்காகவே விளையாடி னேன். தனிப்பட்ட விஷயங்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை.

இவ்வாறு தில்ஷன் கூறினார்.

தில்ஷன் 10 மாதங்கள் இலங்கை அணிக்கு கேப்ட னாக இருந்துள்ளார். தில்ஷன் முன்னாள் கேப்டன்களை குறைகூறியபோது யார் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் காயம் காரணமாக அவர் விளையாடாத டெஸ்டில் இலங்கை அணியை சங்கக்கரா வழிநடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்