2-வது இடத்தை தக்கவைக்குமா இந்தியா?

By செய்திப்பிரிவு

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றாலோ அல்லது சமனில் முடித்தாலோ மட்டுமே அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இந்திய-நியூஸிலாந்து அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் அதன் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றாலும், கூடுதலாக ஒரு ரேட்டிங் புள்ளி மட்டும் கிடைக்கும். அதாவது இந்திய அணி 118 ரேட்டிங் புள்ளிகளைப் பெறும்.

ஒருவேளை நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றால் 5 ரேட்டிங் புள்ளிகளை இழக்கும். 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்தி ரேலியாவைவிட கூடுதலாக ஒரு ரேட்டிங் புள்ளியை பெற்றிருக்கும். ஆனால் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது. இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கிலோ அல்லது 0-0 என்ற கணக்கிலோ டிராவில் முடியுமானால் இந்தியா 2-வது இடத்தையும், நியூஸிலாந்து 8-வது இடத்தையும் தக்கவைத்துக் கொள்ளும்.

நியூஸிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரை வென் றால் மேற்கிந்தியத் தீவுகளை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்தைப் பிடிக்கும். நியூஸி லாந்து 2-0 என்ற கணக்கில் வென்று, இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தால், நியூஸிலாந்து 6-வது இடத்தை பிடிக்கும். இலங்கை 7-வது இடத்துக்கு தள்ளப்படும்.

தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா, 11-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கோலி ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் காண இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். முழு பார்மில் இருக்கும் கோலி, நியூஸிலாந்து தொடரின் முடிவில் முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

ஜோதிடம்

28 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

32 mins ago

சுற்றுலா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்