ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடித்தார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ். கோலி தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 189 ரன்கள் குவித்ததன் மூலம் டிவில்லியர்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கான ஐசிசி கனவு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்த டிவில்லியர்ஸ், தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசைகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசைகளில் முதலிடத்தைப் பிடித்த 3-வது தென் ஆப்பிரிக்கர் டிவில்லியர்ஸ் ஆவார். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், ஆம்லா ஆகியோர் டெஸ்ட், ஒருநாள் போட்டி என இரு தரவரிசைகளிலும் முதலிடத்தில் இருந்துள்ளனர். சர்வதேச அளவில் இரு தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த 9-வது வீரர் டிவில்லியர்ஸ் ஆவார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 3 சதம் கண்ட தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் 61 இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவருடைய சிறந்த தரவரிசை.
இந்திய வீரர்களில் கேப்டன் தோனியைத் தவிர மற்ற அனைவரும் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தோனி தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவண் ஓர் இடத்தை இழந்து 10-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3 இடங்களை இழந்து 18-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 4 இடங்களை இழந்து 23-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் சோட்சோபி, மோர்கல் ஆகியோரும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர். சோட்சோபி 8-வது இடத்திலும், மோர்கல் 9-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 43-வது இடத்திலும் இஷாந்த் சர்மா 51-வது இடத்திலும் (16 இடம் முன்னேற்றம்) உள்ளனர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
வணிகம்
35 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago