பெடரர் அதிர்ச்சி தோல்வி

By ஏஎஃப்பி

ஜெர்மனியின் ஸ்டர்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 302-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டாமி ஹாஸை எதிர்த்து விளையாடினார்.

39 வயதான டாமி ஹாஸ் இந்த ஆட்டத்தில் 2-6, 7-6 (10-8), 6-4 என்ற செட் கணக்கில் பெடரரை தோற்கடித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான டாமி ஹாஸ், பெடரரை வீழ்த்துவது இது 4-வது முறையாகும். நெருங்கிய நண்பர்களான இருவரும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் பெடரர் 13 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பெடரர் அதன்பின்னர் ஒரு சில தொடர்களில் விளையாடிய நிலையில் விம்பிள்டன் போட்டிக்கு தயாராகும் விதமாக கடந்த 3 மாதம் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெர்மனி டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய முதல் ஆட்டத்தி லேயே தோல்வியை சந்தித்துள் ளார். 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள, 35 வயதான பெடர ருக்கு இந்த சீசினில் இது 2-வது தோல்வியாக அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

29 mins ago

ஓடிடி களம்

46 mins ago

விளையாட்டு

53 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்