தொடரை வெல்வது யார்? ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் இன்று தொடங்குகிறது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியல் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது போட்டியில் சந்திக்கின்றன. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத ஆல்விரோ பீட்டர்சன் இந்தப் போட்டியில் களமிறங்குவார்.

அதனால் கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங் கிய எல்கர், 6 அல்லது 7-வது பேட்ஸ்மேனாக களமிறக்கப் படலாம். மேலும் குயின்டன் டி காக் நீக்கப்படலாம். காயமடைந்துள்ள வேயன் பர்னெலுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரியான் மெக்லாரன் அல்லது வேகப்பந்து வீச்சாளர் ரோரி கிளெய்ன்வெல்ட் சேர்க்கப்படலாம்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாத அதிரடி ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்தப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களமிறங்கினால் ஷான் மார்ஷ் அல்லது அலெக்ஸ் டூலன் நீக்கப்படலாம்.

இனவெறி பிரச்சினை காரணமாக தடை விதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி 1991-ல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியது. அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா அணிகளையும் தனது சொந்த மண்ணிலும், எதிரணிகளின் சொந்த மண்ணிலும் வீழ்த்திவிட்டது தென் ஆப்பிரிக்கா.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரு முறை தோற்கடித்துவிட்ட தென் ஆப்பிரிக்கா, தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தவில்லை. 1993-94 முதல் தற்போதைய தொடருக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற 6 டெஸ்ட் தொடர்களில் 4-ல் ஆஸ்திரேலியா வெற்றி கண்டுள்ளது.

இரு தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. எனவே இந்த முறையாவது ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து 21 ஆண்டுகால குறையை தென் ஆப்பிரிக்கா போக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டி நடைபெறவுள்ள நியூலேன்ட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 18 வெற்றியையும், 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அந்த 3 முறையுமே ஆஸ்திரேலியாவிடம்தான் தோற்றுள்ளது.

2005-06 முதல் தற்போது வரையிலான காலத்தில் இங்கு 8 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இரு முறை தோற்கடித்துள்ளது. எனவே இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி நேரம்: மதியம் 2

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்