ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்!

By சுரேஷ் மேன்ன்

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் இந்திய கிரிக்கெட் ‘ரவி சாஸ்திரி காலகட்டம்’ என்ற ஒன்றை விரைவில் காணும் என்று 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் பத்தியில் கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார்.

அவர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு:

டைகர் பட்டோடிக்குப் பிறகு ஒரு கேப்டனாகவே வளர்த்தெடுக்கப்பட்ட ரவி சாஸ்திரி ஏன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன்சி செய்தார் என்பது எனக்கு தர்க்கபூர்வமாகத் தெரியவில்லை. அந்த ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் இந்தியா வெற்றி பெற்றது.

ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 அணியை தலைமையேற்றுச் சென்ற காலக்கட்டத்திலேயே அவரை ஒரு லீடர் என்றே அனைவரும் கருதினர். ரவி சாஸ்திரி கிரிக்கெட் ஆட்டத்தை கவனமாகக் கற்ற மாணவர். சுனில் கவாஸ்கரின் கொள்கையை இவர் பெரும்பாலும் பின்பற்றினார். ஆனால் ஒரேயொரு வித்தியாசம்: ரவி சாஸ்திரி ஆக்ரோஷமான கேப்டன், எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார். சுனில் கவாஸ்கர் சற்றே இந்த விஷயத்தில் தடுப்பு உத்தி கொண்டவர்.

பெங்களூரில் முதன் முதலாக ரவி சாஸ்திரியை அண்டர்-19 முகாமில் சந்தித்தேன். அப்போதே, நவ்ஜோத் சித்து, குருசரண் சிங், சதானந்த் விஸ்வநாத் (வி.கீ./ பேட்ஸ்மென்) மனீந்தர் சிங் போன்ற எதிர்கால இந்திய வீரர்களை ரவி சாஸ்திரி திறம்பட வழிநடத்தினார். அப்போதே இந்திய அணிக்காக திட்டங்கள் தீட்டக்கூடியவர் ரவி சாஸ்திரி.

அப்போது ரவி சாஸ்திரி என்னிடம் 22 வயதுக்குள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றார். அப்போதிருந்த அவருடைய மனநிலையின்படி பார்த்தால் குறைந்தது 50 டெஸ்ட் போட்டிகளிலாவது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

திலிப் தோஷியின் (இடது கை சுழற்பந்து வீச்சாளர்) பதிலி வீரராக நியுசீலாந்துக்கு அவசரமாக வரவழைக்கப்பட்ட ரவி சாஸ்திரி, விமான நிலையத்திலிருந்து நேராக மைதானத்திற்கு வர நேரிட்டது. இந்த அவசரமான அறிமுக டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒரு பத்தாண்டுகளிலேயே அணித் தேர்வுக்குழுவை இவர் ஏனோ ஈர்க்கவில்லை. அவரது நேரடியான அணுகுமுறைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது. இளம் வீரராக ஒரு பெரிய ஐகானாகவே அவர் ஒரு புறம் வளர்ந்தாலும் பலருக்கும் பிடிக்காத ஒரு வீரராகவே அவர் இருந்தார். அவரை கேலி செய்வதில் சில ரசிகர்கள் திருப்தி அடைந்து கொண்டிருந்தனர். களத்திற்கு வெளியே அவரது ‘மீறல்கள்’ செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

அணித் தேர்வுக்குழுவுக்கு இவரது பிரபலத்தன்மையையும், அதற்கு எதிரான போக்குகளையும் ஒருங்கே கையாள முடியாமல் போனது. சாஸ்திரி ஒன்றும் துறவி அல்ல, ஆனாலும் அவர் மிக முக்கியமான ஒருவர், அணிக்காக பங்களிப்பு செய்வதில் அவர் ஒரு தொழில்பூர்வ ஆட்டக்காரர். பிசிசிஐ-யில் பலவீனமான சிலர் இருந்ததால் ‘சாஸ்திரி காலக்கட்டம்’ என்ற ஒன்று உருவாகமலேயே போனது.

20-வயதுகளில் இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது கடினமான சூழல். ஆனால் எதிர்மறைகளை அவர் தன்னை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

எதிர்மறை விமர்சனங்கள் எனக்கு தூண்டுகோலாக அமைந்தன என்று சாஸ்திரி என்னிடம் கூறினார். அதாவது 1980-களில் அவர் பின்கள வீரர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற நிலையிலிருந்து தொடக்க வீரராக வளர்ச்சி கண்டார். பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்தபோது என்னிடம் தெரிவித்தார்.

ஊடகப் பணி

30 வயதில் அவரது கனவு முடிவுக்கு வந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரது நண்பர் மார்க் மஸ்கரன்ஹாஸ், ரவி சாஸ்திரிக்கு ஊடகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். கொழும்புவில் ஆசியக் கோப்பை போட்டிகளின் போது சாஸ்திரி ஓய்வு அறிவித்தார். அப்போது, கிரிக்கெட் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத சி.என்.என். சானலே ரவி சாஸ்திரி ஓய்வு அறிவித்த செய்தியை ஒளிபரப்பியது.

இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக, அவர் விளையாடிய காலத்தில் செய்ய முடியாததை செய்ய வாய்ப்பிருக்கிறது. பலவழிகளில் இந்தப் பதவிக்கு பொருத்தமான நபர் ரவி சாஸ்திரிதான். வீரர்களால் டன்கன் பிளெட்ச்சரை எளிதில் அணுக முடியாத நிலையில் இப்போது ரவி சாஸ்திரி வீரர்களுடன் வீரராக இருந்து செயலாற்றுவது நிச்சயம் பலன் சேர்க்கும்.

வீர்ர்களுடன் நேரடியாகப் பேசி, வீரர்களிடம் கருணையும், புரிதலையும் ஏற்படுத்தக்கூடிய பரந்த மனது படைத்த ஆனால் கண்டிப்பான அணுகுமுறை கொண்ட ஒருவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவை என்றால் அது ரவி சாஸ்திரி என்று கூறலாம்.

1994ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றார் அதன் பிறகே அவர் ஊடக ஆளுமையாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிசிசிஐ என்ற நிறுவனத்திற்கான மனிதராகவே அவர் உருவெடுத்து விட்டார்.

அவர் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஊடகத்தில் பணிபுரிவதன் வாயிலாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து போட்டிகளையும் காண வாய்ப்பு பெற்றுள்ளார். அவரே கூறுவது போல், “என்னிடம் இந்திய அணிக்கு அளிக்க நிறைய கிரிக்கெட் அறிவு உள்ளது, மறப்பதற்குள் அதனை பயன்படுத்துவேன்’ என்றார்.

உள்நாட்டு கிரிக்கெட்

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் பொதுவாக கவனிக்கப்படுவதில்லை, அதனை மேம்படுத்தவும் தான் திட்டம் வைத்திருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சர்வதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார் ரவி சாஸ்திரி.

கால்பந்து பயிற்சியாளர் பாணியிலான ஒரு நபர் ரவி சாஸ்திரி. உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி தற்போது வகிக்கும் பதவியை வகிப்பார். அவரது பொறுப்பு நீட்டிக்கப்பட்டால் ‘ரவி சாஸ்திரி காலக்கட்டம்’என்ற ஒன்று உருவாகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்