வில்வித்தையில் பம்பயலா தேவி அசத்தல்

By செய்திப்பிரிவு

மகளிருக்கான வில்வித்தை தனி நபர் பிரிவில் இந்தியாவின் பம்பயலா தேவி, ஆஸ்திரி யாவின் லாரன்ஸியை எதிர்த்து விளையாடினார். இதில் பம்பயலா தேவி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலி றுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் சீன தைபேவின் லின் ஷியாவை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜிதுராய் மீண்டும் ஏமாற்றம்

ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜிது ராய், பிரகாஷ் நஞ்சப்பா ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஜிது ராய் 554 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தையும், நஞ்சப்பா 547 புள்ளிகளுடன் 25-வது இடத்தையுமே பிடிக்க முடிந்தது. இந்த சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவதார் சிங் தோல்வி

ஆடவருக்கான 90 கிலோ ஜூடோ எடை பிரிவில் இந்தி யாவின் அவதார் சிங், அகதிகள் அணியை சேர்ந்த மிசங்காவிடம் தோல்வியடைந்தார்.

சதிஷ் சிவலிங்கம் ஏமாற்றம்

ஆடவருக்கான 77 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தி யாவின் சதிஷ் சிவலிங்கம் ஏமாற்றம் அளித்தார். அவர் 329 கிலோ எடையை தூக்கி 4-வது இடம் பிடித்தார். ஸ்நாட்ச் பிரிவில் 148 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோ எடையையும் அவர் தூக்கினார்.

மகளிர் ஹாக்கியில் தோல்வி

மகளிர் ஹாக்கியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதி யது. தொடக்கம் முதலே ஆஸ்தி ரேலியா ஆதிக்கம் செலுத்தியது. 4 நிமிடத்தில் அந்த அணியின் கேத்ரின் முதல் கோலை அடித்தார். அடுத்த 4-வது நிமிடத்தில் மோர்கன் ஜார்ஜினா கோல் அடிக்க முதல் பாதியில் ஆஸ்திரேலியா 2-0 என வலு வான முன்னிலை பெற்றது.

34-வது நிமிடத்தில் ஆஸ்தி ரேலியா 3-வது கோலை அடித்தது. இந்த கோலை ஜனி கிளாக்ஸ்டன் அடித்தார். அடுத்த நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து இந்தி யாவுக்கு அதிர்ச்சி அளித்தது ஆஸ்திரேலியா. இந்த கோலை ஜார்ஜினி பார்க்கர் அடித்தார்.

42, 43-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கென்னி ஜோடி இரு கோல்கள் அடிக்க இந்திய அணி துவண்டது. ஆட்டம் முடிவடையை 8 விநாடி கள் இருந்த நிலையில் இந்தியா வின் அனுராதா கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-6 என்ற கோல் கணக் கில் தோல்வியடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்