கால்பந்து விளையாட்டில் இந்தியா முன்னேற வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்

By பிடிஐ

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இந்த ஆண்டு நடை பெறவுள்ளது. இதை முன்னிட்டு அகில இந்திய கால்பந்து கூட்ட மைப்பின் வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த தொடரை வெற்றிகர மாக நடத்தி முடிப்பதுடன் நமது பணி முடிந்துவிடக் கூடாது. இந்த போட்டியை பயன்படுத்தி நம் நாட்டில் இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கவும், கால் பந்து விளையாட்டில் முன்னேற வும் முயற்சி செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கால்பந்து விளை யாட வாய்ப்பு வழங்கவேண்டும். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை முன்னிட்டு ‘மிஷன் 11 மில்லியன்’ என்ற திட்டம் கால்பந்து கூட்டமைப்பால் தொடங்கப்பட உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் நம் நாட்டில் உள்ள 11 மில்லியன் குழந்தைகளாவது பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளை மட்டு மின்றி அவர்களின் பெற்றோரை யும் ஆசிரியர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த விளையாட்டில் இந்தியா முன்னேற முடியும். கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் எதிர்காலத் தில் இந்தியாவை மிகச்சிறந்த இடத் துக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்