செய்தி துளிகள்: 2-வது சுற்றில் சாய்னா நெவால்

By பிடிஐ

இந்தோனேஷியா சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி நேற்று ஜகார்த்தாவில் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாய்னா நெவால் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேவை சேர்ந்த பாய் யு போவுடன் மோதினார்.

இதில் 21-11 19-21, 21-15 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 3 நிமிடங் கள் நடைபெற்றது. சாய்னா தனது 2-வது சுற்றில் இந்தோ னேஷியாவின் பிட்ரியானியை எதிர்கொள்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் தோல்வியை தழுவியது. 14-21, 25-27 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் யங் ஹய் டெரி ஹீ, வெய் ஹன் டன் ஜோடியிடம் இந்திய ஜோடி வீழ்ந்தது. இந்த ஆட்டம் 30 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

**********

எரங்கா பந்து வீச்சு மீது புகார்

இங்கிலாந்து அணிக்கு எதிராக செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் நடை பெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை வேகப்பந்து வீச்சா ளர் சமிந்தா எரங்கா விதிமுறை களுக்கு மாறாக பந்து வீசிய தாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வரும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை ஐசிசி அங்கீக ரித்துள்ள சோதனை மையத்தில் எரங்கா, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் முடிவு வெளிவரும் வரை அவர் சர்வதேச போட்டிக ளில் தொடர்ந்து பந்து வீசலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள எரங்கா மீது தற்போது தான் முதல் முறையாக புகார் கூறப்பட் டுள்ளது. ஆய்வில் எரங்கா மீதான புகார் உண்மை என தெரியவந்தால், பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்யும் வரை சர்வதேச போட்டிகளில் பந்து வீச அவருக்கு தடை விதிக்கப்படும். இங்கிலாந்து தொடரில் ஏற்கெனவே தாமிகா பிரசாத், துஷ்மந்தா ஷமீரா ஆகியோர் காயம் காரணமாக விலகினர். தற்போது எரங்காவும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அது இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

**********

மகளிர் ஹாக்கியில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள மகளிர் ஹாக்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்துடன் நேற்று மோதியது. இதில் இந்திய மகளிர் அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்