இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 339 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 339 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 114 ரன்கள் குவித்தார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.

மிஸ்பா உல் ஹக் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 2-வதுநாள் ஆட்டம் நடைபெற்றது. மிஸ்பா உடன் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். சர்ப்ராஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வகாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் மிஸ்பா போல்டானார்.

அவர் 199 பந்துகளில், 18 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது அமீர் - யாசிர் ஷா ஜோடி 23 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் அணி 99.2 ஓவர் களில் 339 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி விக்கெட்டாக முகமது அமீர் 12 ரன்னில் வெளியேறினார். யாஷிர் ஷா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 12.2 ஓவர்களை சந்தித்து 51 ரன்கள் மட்டுமே எடுத்து எஞ்சிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 70 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மிஸ்பா இந்த டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் கடந்த 82 வருடங்களில் அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மிஸ்பாவுக்கு தற்போது 42 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 42 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. ஹெல்ஸ் 6, ஜோ ரூட் 48, வின்ஸ் 16, பாலன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அலாஸ்டர் குக் 79, பேர்ஸ்டோவ் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

14 mins ago

விளையாட்டு

25 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

56 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

கருத்துப் பேழை

19 mins ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்