லலித் மோடி விவகாரம்: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக லலித் மோடியை தேர்ந்தெடுத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தல் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி சார்பில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற மோசடி புகார்களை அடுத்து லலித் மோடி இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் லலித் மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பிசிசிஐக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் சி.பி.ஜோசிக்கு பிசிசிஐ இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் லலித் மோடியை தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பிசிசிஐ-யின் விதிகளையும், கட்டுப்பாடுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. பிசிசிஐ எடுத்த முடிவுக்கு எதிராகவும், அதன் நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

கல்வி

15 mins ago

தமிழகம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

41 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்