டிஎன்பிஎல் தொடர் வண்ணமயமாக தொடங்கியது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடர் சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.

தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான தேடலாக கருதப் படும் இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ரூ.3.40 கோடி பரிசுத்தொகை கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. சேப்பாக் அணி சதீஷ் தலை மையிலும், தூத்துக்குடி அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் இறங்கின.

முன்னதாக சினிமா நட்சத் திரங்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடிகர் மாதவனுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங் கினார். தமிழக பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இந்த நடனம் 5 வகையான நிலங்களை குறிக்கும் வகையில் இருந்தது. மேலும் பாரம்பரிய கலைகளான சிலம்பம், சுருள் வீச்சு உள்ளிட்டவற்றையும் கலைஞர்கள் செய்து காண்பித்தனர். இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா, தன்ஷிகா ஆகியோர் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். நடிகர் தனுஷ் மைதானத்தை வாகனத்தில் வலம் வந்தபடி விழா மேடைக்கு வந்து கோப்பையை அறிமுகம் செய்தார். இதில் தமிழ்நாடு கிரிக்கெட் தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் இரு அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். வாணவேடிக்கைக ளுடன் தொடக்க விழா நிகழ்ச்சி கள் முடிவடைந்தன.

இதையடுத்து டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த அந்த 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண் டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் 24, கவுசிக் காந்தி 20, மாருதி ராகவ் 13, சுஷில் 25, ஆகாஷ் சுர்மா 5 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சதீஷ் 2, யோ மகேஷ், அந்தோனி தாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட் செய்தது. இந்த டிஎன்பிஎல் தொடரானது 25 நாட்கள் நடத்தப்படுகிறது. மொத்தம் 31 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. நத்தம், நெல்லை ஆகிய பகுதிகளிலும் இந்த தொடரின் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

இதன்படி தொடரின் 2-வது ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தையொட்டியும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.45 மணிக்கு தொடங்கும் விழாவில் பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு பாடுகின்றனர். 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

உலகம்

22 mins ago

சினிமா

37 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்