லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு வலுவாக அணி திரளும் இங்கிலாந்து

By இரா.முத்துக்குமார்

சற்றும் எதிர்பாராத விதத்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் அபாரமான முறையில் வீழ்த்தியதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு வலுவாக அணியை திரட்டுகிறது இங்கிலாந்து.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தற்போதைய உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அதிரடி இரட்டைச் சத சாதனையாளர் பென் ஸ்டோக்ஸ், லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் என்று இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 42 வயது மிஸ்பா உல் ஹக்கை சதம் அடிக்கவிட்டு இங்கிலாந்து தவறிழைத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மேலும் ஆதிகாலத்திலிருந்தே லெக் ஸ்பின் எனும் பூதம் இங்கிலாந்தை தொடர்ந்து அச்சுறுத்தியே வந்துள்ளது. யாசிர் ஷா அதனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஷேன் வார்ன் இந்த ஸ்பின் பூதத்தை இங்கிலாந்துக்காக பூதங்களாக பல்கிப் பெருகச் செய்தார். உண்மையான பிரச்சினை இந்த லெக் ஸ்பின்னை எப்படி எதிர்கொள்வது என்பதே. இதற்குப் பயந்து பசுந்தரை வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தை அமைத்தால் வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, மொகமது ஆமிரிடம் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்போதைக்கு இருதலைக் கொள்ளி எறும்பாக இங்கிலாந்து தத்தளித்து வருகிறது.

எனவே இங்கிலாந்து பேட்டிங்குக்குச் சாதகமான ஆட்டக்களத்தை அமைத்து பெரிய ஸ்கோரை எடுத்து அதன் பிறகு பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தால்தான் உண்டு.

இந்நிலையில் ஓல்ட் டிராபர்டில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத்தை அழைத்து வலு கூட்ட முயற்சிக்கிறது இங்கிலாந்து.

மொயின் அலியின் பலவீனங்களை பாகிஸ்தான் சுத்தமாக அம்பலப்படுத்தியது. இந்த ஆண்டில் மொயின் அலியின் 7 டெஸ்ட் பவுலிங் சராசரி 92 ரன்கள் ஆகும். மாறாக அடில் ரஷித் 7 கவுண்டி போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 337 ரன்களையும் இந்த 7 போட்டிகளில் எடுத்துள்ளார். எனவே மொயின் அலிக்குப் பதிலாக அடில் ரஷித் வர வாய்ப்பிருக்கிறது.

4 டெஸ்ட் போட்டிகளில் 18.66 என்ற சராசரியுடன் சொதப்பி வரும் ஜேம்ஸ் வின்ஸுக்கு நிச்சயம் மாற்று வீரர் தேவை.

2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி வருமாறு:

அலஸ்டைர் குக், ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின், ஜேக் பால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்