35-வது பிறந்த நாள்: தோனிக்கு வாழ்த்து தெரிவித்த சேவாக்

By பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனி தனது 35-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதை யொட்டி ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்த தோனிக்கு நேற்று 35 வயது நிறைவடைந்தது. சேவாக், லட்சுமண், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்களும், தோனியின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித் துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணுராக் தாகூரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேவாக், தனது பாணியில் தோனியை வாழ்த்தியுள்ளார். தோனியுடன் ஆடுகளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித் துள்ள சேவாக், தோனியின் தனித் துவமான ஹெலிகாப்டர் ஷாட்டை குறிப்பிடும் வகையில் ‘தேசிய ஹெலிகாப்டர் நாள்’ என ஹேஷ்டேக் செய்துள்ளார்.

தோனி 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8 ஆயிரத்து 918 ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையில் இந்திய அணி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றில் மகுடம் சூடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 18 மாதங்கள் முதலிடத்தை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் ஓய்வு பெற்றுவிட்ட அவர் 90 ஆட்டங்களில் 4 ஆயிரத்து 876 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்களும், 33 அரை சதங் களும் அடங்கும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்