1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்: வெறும் கையுடன் திரும்பிய இந்திய ஹாக்கி அணி

By செய்திப்பிரிவு

கனடாவின் மான்ட்ரியல் நகரில் 21-வது ஒலிம்பிக் போட்டி 1976-ல் நடைபெற்றது. பிரிட்டிஷ் ராணி 2-வது எலிசபெத் இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியை நடத்திய கனடா 5 வெள்ளியும், 6 வெண் கலமும் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தை பிடித்தது. கோடை கால ஒலிம்பிக் வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு தங்கப்பதக்கத்தை கைப் பற்றாதது இதுவே முதல் முறையாக அமைந்தது.

பதக்கப்பட்டியலில் அமெரிக்காவை ஓரங்கட்டிய சோவியத் யூனியன் 49 தங்கம், 41 வெள்ளி, 35 வெண்கலம் என்று மொத் தம் 125 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கிழக்கு ஜெர்மனி 40 தங்கம் உட்பட 90 பதக்கத் துடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 34 தங்கம் உட்பட 94 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானின் துப்பாக்கிச் சுடும் அணியில் இடம் பிடித்திருந்த தாரா அசோ, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் பிரதமரானார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஹாக்கியும் இம்முறை கைகொடுக்கவில்லை. முதல்முறையாக செயற்கை புல்தரை பயன்படுத்தப் பட்டது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத ஒரு அணி தங்கம் வென்றது இதுதான் முதல்தடவையாகும்.

ஜிம்னாஸ்டிக் சிறுமி

14-வயது ருமேனிய வீராங்கனை நாடியா கொமான்சி ஜிம்னாஸ்டிக் போட்டியில் அதிகபட்சமான பெர்பெக்ட் 10 புள்ளிகளைப் பெற்று 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தார். சிறுமி என்றபோதிலும் போட்டியில் அவர் சிறு தவறு கூட செய்யவில்லை.

எலும்பு முறிவு

ஜப்பானின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஷான் பிரிஜிமோடோ ‘புளோர் எக்சர்சைஸ்’ பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் வலது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. என்றாலும் தங்கள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக வலியையும் தாங்கிக் கொண்டு போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டது அனைவரையும் வியக்க வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

58 secs ago

இந்தியா

3 mins ago

இந்தியா

10 mins ago

கல்வி

13 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்