தோனியின் சாதனையை முறியடித்த ஷிகர் தவண்: ஆசியக் கோப்பையில் மைல்கல்

By செய்திப்பிரிவு

துபாயில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ஷிகர் தவண்.

இங்கிலாந்து தொடருக்கு முழுமையாகத் தேர்வு செய்யப்பட்டு இருந்த ஷிகர் தவண் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. இதனால், ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ் விளையாடியும் ஒரு அரை சதம் கூட தவண் அடிக்காதது பெரும் விமர்சனத்தை அவரின் பேட்டிங் முன் வைத்தது.

இதனால், ஆசியக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடித்தது. இருப்பினும், தேர்வாளர்கள் குழு மீண்டும் தவணுக்கு வாய்ப்பளித்து ஆசியக் கோப்பைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைக் குலைக்காத வகையில் தவணின் பேட்டிங் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக அமைந்தது.

ஹாங்காங் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் சதம் (127) அடித்தார், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 46 ரன்களும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 114 ரன்களும், பைனலில் வங்கதேசத்துக்கு எதிராக 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் தவணின் ஆட்டத்தைப் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு, அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமாக அமைந்தது. இருந்தபோதிலும், இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் ஷிகர் தவண் 342 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

ஆசியக் கோப்பையில் தனிநபரில் அதிகபட்சமாக தோனி கடந்த 2008-ம் ஆண்டில் 327 ரன்கள் சேர்த்து சாதனை செய்திருந்தார். அவரின் சாதனையை ஷிகர் தவண் முறியடித்து 342 ரன்கள் சேர்த்தார். இந்த ரன் குவிப்பு மூலம் ஆசியக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள் சேர்த்த 6-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவண் பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா (372), விராட் கோலி (357), வீரேந்திர சேவாக் (348) ரன்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் தோனி 6 போட்டிகளில் விளையாடினார். இதில் 3 போட்டிகளில் மட்டுமே அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் 33, 8, 36 என மொத்தம் 77 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்