தோனியின் வியூகத்தால் ஆப்கன் விக்கெட்டுகளை இழந்து திணறல்: ஜடேஜா, குல்தீப் அபாரம்

By செய்திப்பிரிவு

துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால், முக்கியத்துவம் இல்லாத இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் 696 நாட்களுக்குப் பின் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், பும்ரா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜாவித் அகமதி, முகமது ஷேசாத் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

தோனி ஸ்டைலில் பேட்டிங் செய்யும் முகமது ஷேசாத் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, சாஹர், கவுல் ஆகியோரின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்குப் பறக்க விட்டார். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் வேகமெடுத்தது. 9 ஓவர்களில் 50 ரன்களே எட்டியது ஆப்கன் அணி.

இதையடுத்து, விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கில் தோனி பந்துவீச்சை மாற்றினார். ஜடேஜா, குல்தீப், ஜாதவ் ஆகியோரை அழைத்து பந்து வீசச் செய்தார். இதனால் ரன் வேகம் கட்டுப்பட்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆப்கன்.

ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜாவித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். 15-வது ஓவரை ஜடேஜா வீசினார். ரஹ்மத் ஷா அதை அடிக்க முற்பட,  பந்தை அவரை ஏமாற்றி ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. இதில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ரஹ்மத் வெளியேறினார்.

குல்தீப் வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி டக்அவுட்டிலும், அடுத்துக் களமிறங்கிய கேப்டன் அஸ்கர் ஆப்கன் க்ளீன் போல்டாகியும் வெளியேறினார்கள். இரு ஓவர்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஆப்கன் அணி திணறியது. விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்த போதிலும் அகமது ஷேசாத் ஒருபுறம் அதிரடியாக பேட் செய்து வருகிறார்.

 

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது. அகமது 87 ரன்களிலும், குல்பாதின் நயிப் 3 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்