தோனி தன் அவுட்டை ரிவியூ செய்ய முடியாமல் போனது: ராகுலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

ஆப்கான் அணிக்கு எதிராக ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியை இந்திய அணி டை செய்ததற்கு நடுவரின் 2  தீர்ப்புகள் பிரதான காரணமானது.

ஒன்று தோனி தவறாக எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார், இன்னொன்று தினேஷ் கார்த்திக் எல்.பி.தீர்ப்பு என்று முக்கியக் கட்டத்தில் இரண்டு தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

முன்னதாக கே.எல்.ராகுல் அருமையான இன்னிங்ஸுக்குப் பிறகு ரிவர்ஸ் ஸ்வீப்பில் ரஷீத் கான் பந்தைக் கோட்டைவிட்டு எல்.பி.ஆனார். அதோடு போகாமல் தினேஷ் கார்த்திக்குடன் ஆலோசித்து ரிவியூ செய்தார், ஆனால் தீர்ப்பு மாறவில்லை. இவர் விரயம் செய்ததால் பிற்பாடு தேவைப்படும்போது அதுவும் தோனிக்கு தேவைப்படும்போது ரிவியூ இல்லாமல் போய் விட்டது.

இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு ராகுல் கூறியதாவது:

ஒரு ரிவியூ மட்டுமே இருக்கும் போது அது ஒரு இக்கட்டான விஷயமே. இப்போது நினைக்கும் போது ரிவியூ கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. வெளியில் பட்டதாகத் தெரிந்தது, எனவே ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது தவறாகப் போய்விட்டது.

இப்போது ரிவியூவை ரிவியூ செய்யும் போது நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பந்து மந்தமாகி திரும்பவும் ஆரம்பிக்கும் போது மிடில் ஆர்டர் வீரர்களுக்கு கடினமாகிப் போனது. தினேஷ் நன்றாக ஆடினார், கடைசியில் ஜடேஜா, தீபக் நன்றாக போராடினர், என்று கூறினார் ராகுல்.

ஆனால் நெட்டிசன்கள் அவர் ரிவ்யூவுக்காக அவரை மன்னிப்பதாக இல்லை:

தர்மேஷ்: இங்கிலாந்திலும் ரிவியூக்களை விரயம் செய்ததில் ராகுல் புகழ்பெற்றவர். சுயநலவாத வீரர்..

அபிஷேக் குமார்: லெஜண்ட்கள் தங்களைக் காக்க ரிவியூ பயன்படுத்துவர் ஆனால் ராகுல் எடுத்த ரிவியூ இரண்டு பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கியுள்ளது.

அபூர்வ் டாங்க்கே: இந்தியா நல்ல நிலையில் இருந்த போது ராகுல் ரிவியூவை விரயம் செய்தார். ரிவியூவை விரயம் செய்து விட்டால் நடுவரை விமர்சிக்கும் உரிமையை இழக்கிறோம்.

ராய்ஜாய்: மிடில் லெக் ஸ்டம்ப்களை காட்டிக் கொண்டு ரிவர்ஸ் ஸ்வீப் செய்து தான் அவுட் என்று தெரிந்தே ரிவியூ செய்து விரயம் செய்தார் ராகுல். அதன் பிறகு மோசமான அம்பயரிங்.

இவ்வாறு ராகுலை வறுத்தெடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்